சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் கசிவு..!

364

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் கசிவை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைத்து வீரர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிவேகமாக பறந்து வந்த பாறைத்துண்டு ஒன்று விண்வெளி நிலையம் மீது மோதியது. இதனால், விண்வெளி நிலையத்தில் சிறிய அளவில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீரமைக்கும் பணியில் விண்வெளி வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.