மழை பெய்யாததால் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

200

மழை பெய்யாததால் காவிரியின் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாய் மறைந்ததையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத் தேர்தல் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக விளங்குவதாகக் கூறினார். தினகரனின் 20 ரூபாய் திட்டம் மதுரை மக்களிடம் செல்லுபடியாகாது என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.