தென் கொரியாவில் நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 மீனவர்கள் உயிரிழந்தனர்..!

669

தென் கொரியாவில் நடுக்கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 மீனவர்கள் உயிரிழந்தனர்.
தென் கொரியா நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியான இன்ச்சியானில் பெரிய அளவிலான மீன்பிடி படகு ஒன்று, இரண்டு மாலுமிகள் மற்றும் 20 பயணிகளுடன் சென்றது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற கடற்படையினர், மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிக்காப்டர் மூலமும் தேடுதல் பணி நடந்த வருகிறது. விபத்து குறித்து அறிந்த தென் கொரிய அதிபர் மூன் ஜே, மாயமானவர்களை விரைந்து தேட உத்தரவிட்டுள்ளார்.