தென் கொரியாவில் லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம்..!

941

தென் கொரியாவில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தென்கொரியாவின் பியோங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நகரில் இருந்து தெற்கு பகுதியில் 80 கிலோ மீட்டர் தொலைவில் 4 புள்ளி 7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியோங்சங் நகரில் எந்தவிதமான அதிர்வும் உணரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்கள் சற்று அச்சத்துடனே உள்ளனர். இந்நிலையில், நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தென் கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.