தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

362

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை – திருநெல்வேலி, சென்னை-கோவைக்கு இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரயில் பயணத்தின்போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள ரயில் பார்ட்னர் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி மஹா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கெனவே சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, தீபாவளியையொட்டி, சென்னை-திருநெல்வேலிக்கு 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும், சென்னை-கோவைக்கு 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.