உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்..!

287

உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் உயர் பதவிகளில் ஒன்றான துணை இயக்குனர் பதவிக்கு, ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், தங்கள் நாட்டின் சார்பாக ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படி, இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பரிந்துரைக்கப்பட்டார். இவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் பதவிக்கு, சவுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பசுமைப் புரட்சியின் தந்தை என அழைப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் தான் சவுமியா என்பது குறிப்பிட்டத்தக்கது.