தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை….

237

தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடத்தில் மிதமான மழை பெய்துள்ளதாக கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர், தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி இயல்பான மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.