திருச்சி விமான நிலையத்தில் 3 வது நாளாக சி.பி.ஐ போலீசார் சோதனை….

411

திருச்சி விமான நிலையத்தில் 3 வது நாளாக சி.பி.ஐ போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சுங்கத்துறை உதவி ஆணையர் உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச விமான நிலையமான திருச்சி விமானநிலையத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கிருந்து வருவதுமாக உள்ளனர். இந்நிலையில் அண்மைகாலமாக திருச்சி விமான நிலையம் வழியாக நடைபெற்று வரும் தங்கம் கடத்தலை தடுக்க முடியாமல் சுங்கத்துறையினர் திணறி வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ-யும் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய முன் தினம் திருச்சி விமான நிலையத்திற்குள் அதிரடியாக நுழைந்த சிபிஐ அதிகாரிகள், தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 2 வது நாளாகவும் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 9 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த சி.பி.ஐ அதிகாரிகள், சுங்கத்துறை உதவி ஆணையர் உள்பட 19 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் 3 வது நாளாக திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.