மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் …!

261

டெல்லி மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இமாசல பிரதேச தலைநகர் சிம்லாவுக்கு ஓய்வெடுக்க சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீரென வயிறுவலி ஏற்பட்டதை அடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு திரும்ப அழைத்து வரப்பட்டார். டெல்லி கங்காராம் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணிக்கு அனுமதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி தற்போது இருந்து வருகிறார். இதனிடையே, அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஒரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.