குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று, சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

367

குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று, சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைய இருப்பதால், ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன. இது தொடர்பாக விவாதிக்கவும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, லாலு பிரசாத், மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.