சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து …!

826

சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, சென்னை சத்யமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முழு ஆரோக்கியத்துடன் நிறைவான மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.