மதச்சார்பின்மையும், சுதந்திரமும் இந்தியாவில் அபாய கட்டத்தில் இருப்பதாக சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

382

மதச்சார்பின்மையும், சுதந்திரமும் இந்தியாவில் அபாய கட்டத்தில் இருப்பதாக சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
மக்களவையில் உரையாற்றிய அவர், சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரசார் எதிர்கொண்ட சிரமங்களை விவரித்தார். ஆனால், ஒருவர் கூட தங்கள் நிலைப்பாட்டில் பின்வாங்கவில்லை என்று கூறிய சோனியா காந்தி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு சில இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை மறக்கக் கூடாது என்றார். சுதந்திரத்தை நாம் பேணிக் காத்தால் பிரித்தாளும் அரசியலில் ஈடுபடும் சக்திகளை தோற்கடிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். தற்போது மதச்சார்பின்மையும் சுதந்திரமும் அபாய கட்டத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்த சோனியா காந்தி, பிரிவினைவாத சக்திகள் வெற்றி பெற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.