சோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..!

115

மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், வரும் 23-ந்தேதி சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.