காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக டெல்லி சென்றுள்ள கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேசவுள்ளார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.