தாயை மகனே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

195

சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் கிருஷ்ணா நகர் டி.வி.எஸ். அவென்யூ 40வது தெருவில் வசித்து வருபவர் ஜோதி பிரபா. இவர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது மகன் சத்தியகுமாரே தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஜெ.ஜெ.நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.