முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இரங்கல்..!

258

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலை சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதியாகத் திகழ்ந்ததோடு, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்டவர் முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி என்று கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி மக்களவையை நடுநிலை தவறாது நடத்தியவர் என்றும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பொதுவாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.