சோமாலியா நாட்டில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில், 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்!

254

சோமாலியா நாட்டில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில், 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சோமாலியாவின் தலைநகர் மோகாடிஷூவில், பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தாக்குதலால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.