சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 189 பேர் உயிரிழந்ததாக தகவல்!

345

சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 189 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அதிபர் அப்துலானி முகமது தலைமையின் கீழ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக
அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷ்பாப் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் மொகதிசுவில் உள்ள மார்க்கெட்டில் இன்று வெடிகுண்டி ஏற்றி வந்த லாரியை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். வெடி விபத்தில் சிக்கி இதுவரை 189 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்ட மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அல்-ஷ்பாப் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அதிபர் அப்துலானி முகமது கடும் தெரிவித்ததோடு, 3-நாள் துக்க தினம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வெடி விபத்து ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மோசமான வெடிகுண்டு தாக்குதல் என அரசு அறிவித்துள்ளது.ice_screenshot_20171015-182402