உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது : முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சோராப்ஜி

298

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சோராப்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் தற்போது வினோதமான அரசியல் சூழல் நிலவி வருவதாக கூறினார். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதை தள்ளி வைக்கவேண்டும் என்று சோலி சோராப்ஜி தெரிவித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை ஆளுநர் ஒத்திவைக்கவேண்டும் என்று கூறியுள்ள சோலி சோராப்ஜி, நல்ல காரணங்களுக்காக ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று தெரிவித்தார். முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டுள்ளதால் அதை பன்னீர்செல்வத்தால் திரும்ப பெற முடியாது என்றும் சோலி சேராப்ஜி தெரிவித்தார்.