சோழபுரத்தில் புதையுண்ட கற்கோவிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

245

சோழபுரத்தில் புதையுண்ட கற்கோவிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் ஆண்ட சிவகங்கையில் பிரசித்தி பெற்ற காளையார் கோவில், கண்ணாத்தாள் கோவில், கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோவில் என பல்வேறு கோவில்கள் உள்ளன. இதில், அரிதான கற்கோவில் சிதிலமடைந்த நிலையில் பூமிக்குள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களின் கட்டிட கலைக்கு சான்றாக இருக்கும் இந்த கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருக்கோவிலை தொல்லியல்துறை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதைந்த கோவிலில் புதையல் உள்ளதா என தமிழக தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.