தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த சோபியாவுக்கு உடல்நலக் குறைவு..!

326

தமிழிசை சௌந்தரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, தமிழிசை அளித்த புகாாின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோபியாவை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். சோபியாவை சிறையில் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.