மூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி

534

சமூக வலைதளங்களில் பரவி வரும் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பர வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்துக் கடவுளான விநாயகர், பிற மதங்களைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து,புத்தர் போன்றவர்களுடன் அமர்ந்து ஆட்டிறைச்சி உணவை சுவைப்பது போன்ற காட்சி இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர்.