டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

76

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. கடும் குளிரும் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக டெல்லி சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பனிப்படலமாக காட்சியளிக்கிறது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்கின்றனர்.

பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய 18 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. டெல்லியில் காற்றின் தரமும் மோசமாக காணப்பட்டது. தொடர்ந்து கடும் குளிரும் காணப்படுவதால் சாலையோரம் வசிக்கும் மக்கள் இரவு நேர தங்கும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.