சென்னையில் நடப்பாண்டிற்கான ஸ்னூக்கர் போட்டி, அகில இந்திய அளவில் 128 பேர் பங்கேற்பு

206

சென்னையில் நடைபெற்ற ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில், மாநில அளவிலான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எஸ் வி.எஸ் கிளப் தலைவர் கலியபெருமாள் மற்றும் என்.மணிமாறன், கிஷன் கோதாரி ஆகியோர் இணைந்து நடத்தும் ஸ்னூக்கர் 2019 சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.சென்னையில் ஸ்னூக்கர்ஸ் விளையாட்டு குறைந்துள்ளதால் இவ்விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிறது.இந்த ஸ்னூக்கர்ஸ் போட்டியில் அகில இந்திய அளவில் இருந்து 128 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று 26 பேர் அடுத்த கட்டமாக 4வது தகுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். குறிப்பாக 3 பெண்கள் உட்பட பள்ளி மாணவர்கள் மற்றும் மாநில அளவிலான வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியின் இறுதி சுற்று வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.