தேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்

2687

தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய திரைப்படை விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு திரைப்படக்கலைஞர்களுக்கு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு குடியரசுத் தலைவர் வராததால், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார். இதனால் திரைக்கலைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பல கலைஞர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 68 கலைஞர்களை தவிர்த்து, மற்ற கலைஞர்களுக்கு ஸ்மிருதி இரானி தேசிய திரைப்பட விருதை வழங்கினார். இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான், யேசுதாஸ் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.