மக்களவை சபாநாயகரிடம் ஓ.பி.எஸ். அணி மனு

259

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ. விசாரணை கோரி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பிக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 24 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுந்தரம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தவேண்டும் என்றும் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.