75 சதவீதம் பெண் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது : மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

120

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 75 சதவீதம் பெண் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் ரைசினா டயலாக் 2019 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஸ்மிருதி இரானி பேசுகையில், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டத்தில் இதுவரை 14 கோடி பேர் கடன் பெற்றுள்ளதாகவும், இதில் 75 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும், பெண்கள் முறைப்படுத்தப்பட்ட துறைக்குள் வருவது அதிகரித்து உள்ளதாகவும் ஸ்மிருதி இரானி கூறினார்.