உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பெண் அமைச்சர்கள் இரண்டு பேர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

256

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் அதே துறையில் இணை அமைச்சராக உள்ள ராம்சங்கர் கதேரியாவுக்கு இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் மேனகா காந்தியின் இளைய மகனான வருண்காந்தியின் ஆதரவாக கதேரியா செயல்பட்டு வருகிறார். வருண்காந்தி அலகபாத் பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அடுத்த முதல்வர் வருண்காந்தி என்று சொல்லும் அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இதை பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஆனால் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ஸ்மிருதி இராணியின் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்மிருதி ராணிக்கும், மேனகா காந்திக்கும் போர் மூண்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பெண் அமைச்சர்கள் இரண்டு பேர் இடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.