ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு தடை..!

144

தமிழகத்தில்100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து, மின்னணு நிர்வாக திட்ட வடிவமைப்புக்கு 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மட்டுமே தமிழக அரசு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதனை எதிர்த்திது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஸ்டெக் மெஷினரி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதித்த நீதிபதி, வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.