ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு மாநில அரசுகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி என தகவல்..!

654

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு மாநில அரசுகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் ஸ்மார் சிட்டி எனப்படும் நவீன நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 99 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் நவீன சாலைகள் அமைக்கும் பணி, நீர்நிலைகளை சீர் செய்வது, சிறந்த மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் திட்ட பணிகளுக்காக மாநிலங்களுக்கு இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஷ்ட்ராவுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாயும், மத்தியப்பிரதேசத்துக்கு ஆயிரம் கோடி ரூபாயும் நிதிஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தமிழகத்துக்கு 984 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.