எதிர்வரும் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

299

எதிர்வரும் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தாராபுரம், பெரம்பாலூர், திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் விளைவிக்கப்படுவதால், சந்தையில் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி குறைந்துள்ளது. அத்துடன் மைசூர் வெங்காயத்துக்கு சேமிப்புத்திறன் குறைவு என்பதாலும், தமிழகத்தில் விளைவிக்கும் சின்ன வெங்காயத்தின் சேமிப்புத் திறன் அதிகம் என்பதாலும் ஒரு கிலோ விலை 16 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளுர் சந்தையில் வெங்காய விதை கிலோவுக்கு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலத் தேவை இருப்பதாலும், விதை வெங்காயத்தின் தேவை அதிகரிப்பதாலும், மேலும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.