வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவு …!

182

வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பருவமழை பாதிப்புகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளை மாவட்டந்தோறும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு அமைச்சரை நியமித்தும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் புகாத வண்ணம் மின் பகிர்மான பெட்டிகளை நல்லமுறையில் பராமரித்து, உயரத்தில் அமைக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி தொற்று நோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டுள்ளார்.