இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – அதிபர் சிறிசேனா அறிவிப்பு

189

இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் 21–ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500–க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இந்த அவசரநிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்துள்ளார்.
அவசரநிலை மேலும் நீட்டிக்கப்படாது என கடந்த மாதம் சிறிசேனா கூறியிருந்த நிலையில், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.