போடி நகராட்சியில் பல வருடங்களாக நிழல் அளித்து வந்த வாகை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

தேனி மாவட்டம் ஜே.கே.பட்டியில் பல வருடங்கள் ஆன வாகை மரம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனை முறையாக அகற்றக்கோரி பொதுமக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மரம் சாய்ந்து மின்வயர்கள் அறுந்து விழுந்துள்ளது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தவவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள்மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.