முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி..!

294

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இளம் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களை குவித்தது. இந்திய வீரர் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 90 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, 19 வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.