6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவில்லை என்றால் வேலையிழக்கும் அபாயம்!

407

6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவில்லை என்றால் வங்கி ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளதாக, கன்னட மேம்பாட்டுத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து, வங்கிகளில் கன்னட மொழியானது கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகளின் தலைவர்களுக்கு கன்னட மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு கன்னட மொழியானது கட்டாயம் என்பதை உறுதி செய்ய வலியுறுத்தியும்,
6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவில்லை என்றால் அவர்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி வளாகத்திற்கு மொழியை கற்பிக்க மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி வங்கிகள் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதால்,
கர்நாடக மாநிலத்தில் வேலைக்கு பணியாளர்களை எடுக்கும்போது, கன்னட மொழி தெரிந்த ஊழியர்களை பணி அமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.