சிவசேனா கட்சியினரை கண்டித்து காதலர்கள் முத்த போராட்டம் | கிஸ் ஆப் லவ் அமைப்பினர் அழைப்பு

497

கொச்சியில் சிவசேனா கட்சினரை கண்டித்து, காதலர்கள் முத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மரைன்டிரைவ் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல காதலர்களும் இந்த பகுதிக்கு அதிகமாக வருகின்றனர். அவர்களின் சில நடவடிக்கைகளால், அப்பகுதிக்கு வருபவர்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். இதனையடுத்து, மரைன் டிரைவ் பகுதிக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அங்கிருந்த காதலர்களை விரட்டி அடித்தனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாக, இன்று மாலை கொச்சியில் முத்த போராட்டத்திற்கு கிஸ் ஆப் லவ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொச்சியில் இந்த அமைப்பினர் பொது இடங்களில் முத்தப்போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.