ஜிசாட் செயற்கைக்கோளை இந்தியாவில் இருந்து செலுத்த திறன் இல்லை – இஸ்ரோ தலைவர் சிவன்

905

ஜிசாட் செயற்கைக்கோளை இந்தியாவில் இருந்து செலுத்த திறன் இல்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிசாட் செயற்கைக்கோள் அதிக எடை கொண்டதால் பிரான்சில் இருந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறினார். மேலும், மார்ச் மாதம் ஜிஎஸ்எல்வி ஜிசாட் 6 ஏ மற்றும் அதே மாத இறுதியில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்1 ஐ எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.