முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

104

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
காரைக்கால் அருகே குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பட்டப் பகலில் கொடூரமான முறையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக குற்றவாளிகளை காரைக்கால் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் 4 பேர் தாமாகவே முன்வந்து இன்று சரணடைந்தனர். அவர்களை பாதுகாப்புடன் போலீசார் காரைக்காலுக்கு அழைத்துச் சென்றனர். இவர்களுக்கு சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.