சிவகாசியில் மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்..!

264

மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, சிவகாசியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், கடந்த 16 நாட்களாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளை அடைத்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தால், அதனை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கடைகள் அடைப்பு என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பட்டாசு உற்பத்தியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அதன் சார்பு தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சிவகாசியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.