சிவகாசி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

236

சிவகாசி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்யாநகரில் அடர்ந்த முட்புதர்களால் ஆன காட்டுப்பகுதி உள்ளது. இந்நிலையில் நேற்று காட்டுப்பகுதிக்குள் விறகு பொறுக்க சென்ற அப்பகுதி பெண்கள், அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருத்தங்கல் காவல்நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த தலை மற்றும் உடல்பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சிவகாசி காவல்துறை கண்காணிப்பாளர் நியமிக்கப்படாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.