வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல் விளக்கம் : நேர்த்தியாக செய்து காண்பித்த தீயணைப்புத் துறையினர்

335

சிவகாசியில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினரின் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினரின் மீட்பு பணி குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், அதில் சிக்கியுள்ளவர்களை குறித்து இதில் விளக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தேவையான முதல் உதவிகளை வழங்குதல், வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து நேர்த்தியாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.