சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

314

சிவகாசி பேருந்து நிலையம் அருகே தெய்வானை நகரில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு பணிகளை முடித்தபின் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றநிலையில், அதிகாலையில் அந்த பட்டாசுக் கடையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக கடையின் உள்ளே பண்டல்பண்டலாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த அனைத்துரக பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் அந்தப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசுகளும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது.