சிவகாசி மற்றும் பெரம்பலூரில் ஜெயலலிதா தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

258

சிவகாசி மற்றும் பெரம்பலூரில் ஜெயலலிதா தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பாக, சிவகாசியில் ஜெயலலிதா தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் உறுப்பினர் படிவங்களை வழங்கி லட்சக்கணக்கான உறுப்பினர்களை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக ஜெ.தீபா பேரவையின் பொறுப்பாளர்கள் கூறினர்.

இதேபோல், பெரம்பலூரில் ஜெ.தீபா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்..நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டியிட்டு, வெற்றிபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில், ஜெ.தீபா பேரவை சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கன்னியாகுமரி மாவட்ட தீபா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.