நடிகர் சிவகார்த்திகேயனின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழப்பு!

4673

நெல்லை அருகே சொகுசு கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே செவல்விளை பகுதியை சேர்ந்த பூசைத்துரை என்பவர் நடிகர் சிவகார்த்திகேயனிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர், குற்றாலத்தில் இருந்து காரில் கடையநல்லூர் நோக்கி வந்துள்ளார். குத்துக்கல் விலசை என்ற இடத்திற்கு அருகே கார் வந்த போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பூசைத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமான உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அரசு பேருந்து டிரைவருக்கு தென்காசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.