நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் வைக்கப்பட்டிருந்த திருவுருப்படத்திற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினா்.

165

நடிகர் சிவாஜி கணேசனின் 15-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த, அவரது திருவுருப்படத்திற்கு சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.சிவாஜி சிலை அகற்றக் கூடாது என்றும் மணிமண்டபத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனா்.