சிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

178

சிவகங்கை அருகே காதல் விவகாரத்தால், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை அருகே காளையார்கோவில் தாலுகாவில் உள்ள சாத்தனி பனங்காடி என்ற பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகள் வினிதா அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். வினிதா அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரை காதலித்ததாகவும், இதனால் வினிதாவின் தந்தை அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் வினிதா காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோர் காளையார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வினிதாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், சாத்தனி பனங்காடி பகுதி அருகே உள்ள கிணறு ஒன்றில் மாணவியின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் வினிதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.