திருப்பத்தூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

0
34

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காளைகளை காட்சிபடுத்தப்பட்ட விலங்கின பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு காளைகளை அவர்கள் மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தனர். பொங்கலுக்கு பிறகு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று, அப்போது அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY