சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

240

சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் சிவகங்கை அருகே பில்லூர் கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த காளைகள், 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.