அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்ற கருவேல மரங்கள் பறிமுதல்..!

306

இளையான்குடி அருகே அனுமதியின்றி வெட்டி, கடத்த முயன்ற 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்களை வனத்துறையினர் இரண்டு லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 3 மாதங்களில் வெட்டி முடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தங்களை வைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக கருவேல மரங்களை வெட்டி, பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினர், விசவனூர் கண்மாயில் வெட்டி எடுத்து வரப்பட்ட 2 லட்ச ரூபாய் கருவேல மரங்களை இரண்டு லாரிகளுடன் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, கருவேல மரங்களை அனுமதியின்றி, வெட்டி கடத்துவது தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.